பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 23-ம் தேதி உக்ரைன் செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக கடந்த 8-ம் தேதி ரஷ்யா சென்றார். மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்ற பிறகு, அவரது முதல் வெளிநாட்டு பயணமாக ரஷ்யா பயணம் அமைந்தது.
இந்த பயணம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இந்நிலையில், பிரதமர் மோடி ஆகஸ்ட் 23-ம் தேதி உக்ரைன் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பயணத்தின்போது, பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பின்னர் முதன்முறையாக பிரதமர் மோடி அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
















