திரைப்படங்களில் நடிப்பதை முடிந்தால் தடுத்து பாருங்கள் என நடிகர் விஷால் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.
தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கத்தின் நிதியை விஷால் முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் விஷால் விளக்கமளித்துள்ளார்.
சங்கத்தின் நிதி நலிவடைந்த உறுப்பினர்களின் நலனுக்காக பயன்படுத்தப்பட்டது தங்களுக்கு தெரியாதா எனவும் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார். இரட்டை வரிவிதிப்பு, திரையரங்க பராமரிப்பு கட்டணம் என பல்வேறு பிரச்சனைகள் தீர்வு காணப்படாமல் உள்ளதாகவும் விஷால் தெரிவித்துள்ளார்.
 
			 
                    















