திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.மணக்கால் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றுக்கொண்டிருந்த 3 பேரிடம் போலீசார் சோதனை நடத்தினர். அதில் அவர்களிடம் 2 நாட்டு துப்பாக்கி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கோவையை சேர்ந்த முரளி, மகேஸ்வரி, சிவரஞ்சனி என்பது தெரியவந்தது. பின்னர் மூவைரயும் போலீசார் கைது செய்தனர்.