திருச்சியில் பள்ளிவாசல் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்படுவதாகக் கூறி இளைஞர் ஒருவர் மசூதி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் செலவினங்கள் முறையாக கணக்குகாட்டப்படவில்லை என கூறி ரபீக் என்ற இளைஞர் மசூதியின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
தகவலறிந்து சென்ற போலீசார் சமரச பேச்சு நடத்தியதை தொடர்ந்து அவர் கீழே இறங்கினார்.