முன்னாள் எம்பி மாஸ்டர் மாதன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
திரு மாஸ்டர் மாதன் சமுதாயத்துக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் ஆற்றிய சேவைகளுக்காக என்றென்றும் நினைவு கூரப்படுவார் என மோடி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனதுஎக்ஸ் பதிவில்,
“முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாஸ்டர் மதன் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவர் தமது சமூக சேவை முயற்சிகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்ததற்காகவும் என்றென்றும் நினைவுகூரப்படுவார்.
தமிழகத்தில் எங்கள் கட்சியை வலுப்படுத்தவும் அவர் அரும்பாடு பட்டார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி” எனத் தெரிவித்துள்ளார்.