குமரி மாவட்டம் கடையால் அருகே மதுபோதையில் பள்ளிப் பேருந்தை இயக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
குலசேகரத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் கடையல் பகுதியை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளி பேருந்தில் மாணவர்களை வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தனர்.
பேருந்து களியல் அருகே சென்றபோது சாலையில் தாறுமாறாக ஓடியது. அப்போது அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தார்.
அப்போது பேருந்து ஓட்டுநர் ரெதீஷ் மதுபோதையில் வாகனத்தை இயக்கியது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் மாணவர்களை மாற்று வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.