கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக ஆழியாரை அடுத்த பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.