செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யாவின் மறைவிற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
செய்தி வாசிப்பாளராக தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த பத்திரிகையாளர், சகோதரி சௌந்தர்யா அமுதமொழி, உடல் நலக் குறைவால் இன்று காலமான செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.
ஊடகத் துறையில் பல சாதனைகள் படைக்கும் கனவுகளோடு இருந்த சகோதரி சௌந்தர்யா அமுதமொழி அவர்களை, இளம் வயதிலேயே பறிகொடுத்திருக்கும் அவரது, குடும்பத்தினருக்கும், தனியார் தொலைக்காட்சி
ஊடக நண்பர்களுக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.
இந்தக் கடினமான நேரத்தில் இருந்து அவர்கள் மீண்டு வரவும், அவரது ஆன்மா சாந்தியடையவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.