நடிகர் ஜான் விஜய் மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வில்லன் வேடங்களிலும், குணச்சித்திர நடித்து பிரபலமான ஜான் விஜய், தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெண் பத்திரிகையாளர் ஒருவர் அண்மையில் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், ஜான் விஜயால் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண் தன்னிடம் கூறிய தகவல்களை பகிர்வதாக, சின்மயி சில Screenshot -களை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு Me too இயக்கத்தின்போது, ஜான் விஜய் மீது பல பெண்கள் பாலியல் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.