தேசிய புலிகள் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில் பள்ளி மாணவர்கள் புலி வேடமிட்டு, புலிகளை பாதுகாக்க வேண்டும் என்பது தொடர்பான பதாகைகளை கையில் ஏந்தி பேரணியில் பங்கேற்றனர். இதில் கலந்துகொண்ட மாணவர்கள் ஸ்கேட்டிங், சிலம்பம் உள்ளிட்ட கலைகளையும் செய்து அசத்தினர்.