ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் ஒரு கிலோமீட்டர் நீள தேசிய கொடியுடன் பாஜக இளைஞரணியினர் பேரணி சென்றனர்.
கார்கில் போரின் 25-ஆவது வெற்றி விழாவையொட்டி, இந்த பிரமாண்ட பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பாஜக இளைஞரணியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று ஒரு கிலோமீட்டர் நீளமுடைய தேசிய கொடியை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.