திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட வெங்கைய சவுத்ரி, ஏழுமலையானை வணங்கி தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
அவருக்கு தேவஸ்தான வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர். பின்னர் பேசிய, வெங்கைய சவுத்ரி, தனக்கு இந்த பொறுப்பு வழங்கிய முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியாக சியாமளா ராவ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்ட நிலையில், கூடுதல் நிர்வாக அதிகாரியாக ஐஆர்எஸ் அதிகாரியான வெங்கையா சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.