இளைஞர்களை ஒன்று திரட்டி, சுதந்திரப் போராட்டப் பயிற்சியளித்தவர் அர்த்தநாரீச வர்மா என, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
பத்திரிக்கைகள் மூலமாகவும், கவிதைகள் மூலமாகவும் பொதுமக்களிடையே தனது எழுத்துக்களால் சுதந்திர வேள்வியை ஊட்டிய ஐயா சேலம் அர்த்தநாரீச வர்மா அவர்களின் 150 ஆவது பிறந்த தினம் இன்று.
இளைஞர்களை ஒன்றுதிரட்டி, சுதந்திரப் போராட்டப் பயிற்சியளித்தவர். வீரியம் மிகுந்த எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர்.
மகாகவி பாரதியாரின் பெயரால் அவர் நடத்திய வீரபாரதி பத்திரிகை, சுதந்திரப் போராட்டத்தில் இளைஞர்கள் ஈடுபட முக்கியக் காரணமாக இருந்ததால், ஆங்கிலேய அரசால் தடை விதிக்கப்பட்டது.
தேச விடுதலைக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து, தன்னலமின்றிப் போராடிய ஐயா அர்த்தநாரீச வர்மா அவர்களது புகழைப் போற்றி வணங்குகிறோம் என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.