பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானை தொழிலதிபர் முகேஷ் அம்பானியும், அவரது மனைவியும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினருமான நீடா அம்பானியும் பாரீஸில் சந்தித்து பேசினர்.
பாரீஸில் 33-ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் உற்சாகமாக தொடங்கின. இதில் பங்கேற்ற முகேஷ் அம்பானி தம்பதி, பின்னர் அதிபர் மாளிகையில் இம்மானுவேல் மெக்ரானை சந்தித்து பேசினர். பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா தரப்பில் 70 ஆண்கள், 47 பெண்கள் என 117 பேர் கொண்ட குழு பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.