பிரதமர் நரேந்திர மோடி, பாஜக ஆளும் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் முதல்வர் கவுன்சில் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியை பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா வரவேற்றார். இந்த கூட்டத்தில் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அமித் ஷா உள்பட மத்திய அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் மாநிலங்களுக்கான நிதி பகிர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
இந்த முதல்வர்கள் கூட்டத்தில் யோகி ஆதித்யநாத், மோகன் யாதவ், விஷ்ணு தேவ் சஹாய், புஷ்கர் தாமி, நைப் சைனி, என் பிரேன் சிங், ஹேமந்த் பிஸ்வா சர்மா, பிரமோத் சாவந்த் மற்றும் இதர பாஜக முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.