விருதுநகரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்தனர்.
திரவியநாதபுரம் தெருவை சேர்ந்த சூர்யா என்பவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் வீட்டில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் சூர்யா மற்றும் கருப்பசாமி ஆகிய இருவரை கைது செய்தனர்.