தருமபுரி மாவட்டம், ஒகேனக்கலுக்கு வரும் நீரின் வரத்து ஒரு லட்சத்து 66 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால், நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து 13-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.