திமுக ஆட்சியில் யாருக்கும், எங்கும் பாதுகாப்பில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கடலூரில் அதிமுக வார்டு செயலாளர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த மன வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
திமுக, ஆட்சியில் யாருக்கும் எங்கும் பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டியுள்ள அவர்,அரசியல் கட்சியினர் தொடர்ந்து கொலை செய்யப்படும் நிலையில், அதனை தடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
அரசியல் கொலைகளை கடந்து விட நினைக்கும் திமுக அரசு, தனது வழக்கமான கண்துடைப்பு நடவடிக்கைகளால், கணக்கிற்காக சிலரை கைது செய்கிறது என விமர்சித்துள்ள அவர்,அதிமுக வார்டு செயலாளர் கொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.