பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
33- வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. போட்டியில் 13 தமிழக வீரர் மற்றும் வீராங்கனைகள் உட்பட 117 பேர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதி சுற்றில் இந்தியாவின் மனு பாக்கர் பங்கேற்றார். இதில் சிறப்பாக விளையாடிய அவர், 221 புள்ளி 7 புள்ளிகளுடன் 3- ம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார்.
பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது :ஒரு வரலாற்றுப் பதக்கம்! இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றதற்காக வாழ்த்துக்கள். இந்தியாவுக்காக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளதால், இந்த வெற்றி மேலும் சிறப்பு வாய்ந்தது. இது நம்பமுடியாத சாதனை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அதேபோல் மனுபாக்கருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர்.