ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து குறைந்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்படுகிறது.
இதனையடுத்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து நேற்று ஒரு லட்சத்து 60 ஆயிரம் கன அடியாக இருந்தது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து ஒரு லட்சத்து 45 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
இதனால் பரிசல் இயக்கவும், ஆற்றில் குளிக்கவும் 14-வது நாளாக தடை தொடர்கிறது. மேலும், மக்கள் ஆற்றின் அருகே செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.