உலகளாவிய பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வது பெரிய சவாலாக உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் தலைநகட் டோக்கியோவில் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் குவாட் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கூட்டத்தில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படையான டிஜிட்டல் கூட்டாண்மைகளுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவித்தார். கடல்சார் மற்றும் இணைய பாதுகாப்பை கட்டியெழுப்புவதற்கான முன்முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
உலகளாவிய பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வது பெரிய சவாலாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக, ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங்கை சந்தித்து ஜெய்சங்கர் உரையாடினார்.