குழந்தை திருமண தடை சட்டம் அனைத்து மதத்துக்கும் பொருந்தும் என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2012ல் பாலக்காட்டைச் சேர்ந்த இஸ்லாமிய சிறுமிக்கு நடந்த திருமணத்திற்கு எதிரான வழக்கு விசாரணை கேரள உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்த நீதிபதி குன்னிகிருஷ்ணன் குழந்தை திருமணங்கள் குழந்தைகளின் அடிப்படை உரிமையை பறிப்பதாக தெரிவித்தார்.
மதங்களை கடந்து ஒருவர் இந்நாட்டு குடிமகன் என்பதே முதன்மையானது என்றும், அதன் பின் தான் அவர் சார்ந்த மதத்தின் உறுப்பினர் என்ற அந்தஸ்தை அடைவதாகவும் குறிப்பிட்டார்.
எனவே, குழந்தை திருமண தடுப்புச் சட்டம் – 2006, இந்நாட்டு குடிமக்கள் அனைவருக்கும் பொருந்தும் என நீதிபதி குன்னிகிருஷ்ணன் தீர்ப்பளித்தார்.