தமிழகத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத 18 கிளைச் சிறைகளை மூடும் நடவடிக்கையை திமுக அரசு கைவிட்டு, அவற்றை பராமரிக்க வேண்டும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழகத்தில் பாதுகாப்பு குறைபாடு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால் 18 கிளைச் சிறைகளை மூட திமுக அரசு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அடிப்படை வசதிகளை மேம்படுத்தவோ, பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சரி செய்யவோ நடவடிக்கைகள் எடுக்காமல், கிளைச் சிறைகளை மூட முடிவெடுத்திருப்பது, திமுகவின் அடிப்படை நிர்வாக அறிவைக் கேள்விக்குரியதாக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே கிளைச் சிறைகளின் பாதுகாப்பை அதிகரித்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கிளைச் சிறைகளை மூடும் நடவடிக்கையை திமுக அரசு கைவிட வேண்டுமெனவும் அண்ணாமலை கூறியுள்ளார்.