சத்தீஸ்கரில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் கழுகு பார்வை காட்சிகள் வெளியாகியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், சுக்மா, பிஜாப்பூர், ராய்கர், உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.
இந்நிலையில், பஸ்தார் மாவட்டம் சித்ரகோட் மற்றும் தீரத்கர் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வெண்ணிற ஆடையை விரித்தது போல செல்லும் தண்ணீரை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.