தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாகி வருவதாக பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை தொடர்ந்து தமிழகத்தில் அரசியல் கொலைகள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டினார்.
கடந்த 3 நாட்களில் அதிமுக, பாஜக, காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு முதலமைச்சர் ஸ்டாலின் கையில் இல்லை என்பதையே காட்டுவதாகவும், தமிழகத்தின் நிலவும் அரசியல் கொலைகள் பற்றி பேச ராகுல் காந்திக்கு நேரமில்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இது காங்கிரஸ் கட்சியின் கோழைத்தனத்தை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.