ராமநாதபுரத்தில் மதுபோதையில் வாகனங்களை சேதப்படுத்திய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அண்ணா சிலை எதிரே செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையில் 4 பேர் கொண்ட கும்பல் மது அருந்திக்கொண்டிருந்தனர்.
பின்னர் அவர்கள் மதுபோதையில்6 அங்கிருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர். இதனையடுத்து சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை அடித்து உடைத்துவிட்டு தப்பியோடினர் இது குறித்து தகவலறிந்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.