தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை காக்க முடியாவிட்டால் திமுக அரசு பதவி விலக வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழ்நாட்டில் ஒரே நாளில் மட்டும் 3 கொடிய அரசியல் படுகொலைகள் நிகழ்ந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
கொடூரமான அரசியல் படுகொலைகள் ஒரு புறம் இருக்க போதைக் கலாச்சாரமும், அதனால் நிகழும் குற்றச்செயல்களும் தலைவிரித்தாடுவதாகவும் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் எந்த அச்சமும் இல்லாமல் குற்றவாளிகள் நடமாடுகின்றனர் என்றும், இதைத் தடுக்க முடியாமல் காவல்துறை திணறிக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்,.
எனவே சட்டம் – ஒழுங்கை காக்க முடியாவிட்டால் திமுக அரசு பதவி விலக வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.