ஆந்திராவில் மாட்டுவண்டி பந்தயத்தில் பங்கேற்ற அம்மாநில அமைச்சர் மீது மாடு சீறிப்பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பல்லெட்டிபூடி கிராமத்தில் உள்ள அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அமைச்சர் பால வீராஞ்சனேயசாமி பொதுமக்கள் மற்றும் மாடுகளுடன் புகைப்படம் எடுத்தார். அப்போது எதிர்பாரத விதமாக மாடு துள்ளிகுதித்தது. இதில் அமைச்சருக்கு சிறுகாயம் ஏற்பட்டது.