டெல்லியில் ஐஏஎஸ் மாணவர்களின் உயிரிழப்பைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் அருகே பாஜகவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
டெல்லியில் பழைய ராஜேந்தர் நகரில் மழை வெள்ளத்தில் சிக்கி ஐஏஎஸ் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளது.
இந்நிலையில், டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு சட்டவிரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறியதாக கூறி, அக்கட்சி அலுவலகம் அருகே பாஜக மாநில தலைவர் வீரேந்திர சச்தேவா தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் மீது போலீஸார் தண்ணீரை பீய்ச்சியடித்ததால், சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.