தக்காளி விலை உயர்வை கருத்தில் கொண்டு தலைநகர் டெல்லியில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை சார்பில், ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையொட்டி, தக்காளி விற்பனை செய்வதற்கான வாகன சேவையை மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த 10 நாட்களில் தக்காளி விலை இயல்புநிலைக்குத் திரும்பும் என தெரிவித்தார்.