ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் மீனவர்கள் வலையில் ஆயிரத்து 500 கிலோ எடை கொண்ட தேக்கு மீன் சிக்கியது.
மச்சிலிப்பட்டினம் அடுத்த சில்காலண்டி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது மீனவர்கள் வலையில் பெரிய மீன் சிக்கியது. இதனை கண்ட மீனவர்கள் வலையில் சிக்கிய மீனை கரைக்கு கொண்டு வந்தனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.