ஆடி கார்த்திகையையொட்டி, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை சுவாமிநாத கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
முருகக்கடவுளின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாத கோயிலில் ஆடி கார்த்திகையையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, தங்க கவச அலங்காரத்தில் காட்சியளித்த மூலவரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.