ஆந்திராவில் ஓடையை கடந்து செல்ல பாலம் இல்லாததால், பொது மக்கள் பெரிய அளவிலான சமையல் பாத்திரங்களை பயன்படுத்தி ஓடையை கடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.
ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டத்தில் இரு கிராமத்திற்கு இடையே உள்ள ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஓடையை கடக்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.