ஜெர்மனியில் நடைபெற்ற பிரபல பாடகி டெயிலர் ஸ்விஃப்ட் இசை நிகழ்ச்சியை காண ரசிகர்கள் அதிகளவில் குவிந்தனர்.
பிரபல பாடகி டெயிலர் ஸ்விஃப்டின் இசை நிகழ்ச்சி முனிச் நகரில் நடைபெற்றது. 9 ஆண்டுகளுக்கு பிறகு அவர் ஜெர்மனியில் இசை நிகழ்ச்சி நடத்தியதால் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அருகில் உள்ள ஒலிம்பிக் மலை மீது ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
இதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.