சைவ உணவு ஆர்டர் செய்தவருக்கு அசைவ உணவு வழங்கப்பட்டதற்கு Zomatto நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான Zomatto-வில் வாடிக்கையாளர் ஒருவர் சைவ உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால் டெலிவரியின்போது சைவ உணவுக்கு பதிலாக அசைவ உணவு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த வாடிக்கையாளர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து Zomatto நிறுவனம் வாடிக்கையாளரிடம் மன்னிப்பு கோரியுள்ளது.