திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அயனம்பாக்கத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர், சென்னை அண்ணாநகரில் தனது குடும்பத்துடன் ஷாப்பிங் செய்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
அப்போது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த நூறு சவரன் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுதொடர்பான புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், தடயவியல் நிபுணர்கள் உதவியோடு வீட்டில் பதிவாகி இருந்த கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர்.
மேலும், வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.