தேவாரம் டாஸ்மாக் பாரில் தாக்கப்பட்ட திமுக கவுன்சிலரின் கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தேனி மாவட்டம், தேவாரம் திமுக பேரூராட்சி மன்ற தலைவரான லட்சுமியின் மகனான. பால்பாண்டி அந்த பகுதியில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார்.
தேவாரம் பேரூராட்சி ஏழாவது வார்டு திமுக பெண் கவுன்சிலரான கவிதாவின் கணவர் ரமேஷ், டாஸ்மாக் பாரில் மது குடிக்க சென்றுள்ளார். அங்கு வழக்கம் போல அனைவரிடமும் வசூல் செய்வதுபோல பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறில், பால்பாண்டி ரமேஷை கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவமனையில் ரமேஷ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தலைமறைவாக உள்ள பால்பாண்டியை போலீசார் தேடி வருகின்றனர்.