21-ஆம் நூற்றாண்டில் சீன மக்கள்தொகை பாதியாக குறையும் என ஐ.நா. கணித்துள்ளது.
அந்த வகையில் 2024 முதல் 2054 வரையிலான 30 ஆண்டுகாலத்தில், சீனாவில் 70 கோடி பேர் மரணமடைவர் என்றும், அந்நாட்டின் மக்கள்தொகையானது மீண்டும் 1950-களில் இருந்த எண்ணிக்கையை எட்டும் என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே மக்கள்தொகை சரிவை சந்தித்து வரும் சீனாவில், கடந்த ஆண்டில் 90 லட்சம் குழந்தைகள் பிறந்ததாகவும், 1949-ஆம் ஆண்டுக்குப் பின்னர் சீனாவில் பிறப்பு வீதம் குறைந்ததை இது உணர்த்துவதாகவும் ஐ.நா. கூறியுள்ளது.