கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பில்லூர் அணையின் நீர்மட்டம் கடந்த இரண்டு மாதங்களில் 4வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது.
பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் பவானி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றபட்டு வருகிறது.
இதனையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வன பத்திரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.