கடந்த 2004-இல் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 90 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த முதலீட்டு செலவினம், தற்போது 11 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்திருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
டெல்லி விஞ்ஞான் பவனில், ‘வளர்ச்சியடைந்த பாரம்: 2024-25 பட்ஜெட்டுக்கு பிந்தைய மாநாட்டை’ தொடங்கிவைத்து பேசிய அவர், நாட்டை வளப்படுத்துவதில் முதலீட்டு செலவினம் முக்கிய பங்கு வகிப்பதாக கூறினார்.
அந்த வகையில், 2004-இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 90 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த முதலீட்டு செலவினம், பின்னர் 2 லட்சம் கோடியைக் கடந்து, தற்போது 11 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும் இன்றைக்கு உலகின் 5-ஆவது பெரிய பொருளாதாரமாக உள்ள இந்தியா, விரைவில் 3-ஆவது இடத்தை பிடிக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியா தற்போது 8 சதவீத பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுள்ளதாகவும், விரைவில் வளர்ச்சியின் பாதையில் நாம் வீறுநடை போடுவோம் என்றும் அவர் சூளுரைத்தார்.