ஜம்முவிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நோக்கிச் சென்ற விரைவு ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அந்த ரயிலில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
ஜம்மு- ஜோத்பூர் விரைவு ரயில் பஞ்சாப் மாநிலம் பெரோஷ்பூர் ரயிலில் நிலையத்திற்கு சென்ற போது, அதில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வெளியானது. உடனடியாக பயணிகளை வெளியேற்றி, போலீஸார் சோதனை நடத்தினர்.
சோதனையில் சந்தேகத்துக்கு இடமாக எந்தவொரு பொருளும் சிக்கவில்லை என போலீஸார் தெரிவித்தனர்.