உத்தர பிரதேசத்தில் லவ் ஜிஹாத் சட்டத்தை கடுமையாக்கும் மசோதா சட்டப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கட்டாய மதமாற்றத்துக்கு எதிராக அம்மாநிலத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டப்படி அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
இதை ஆயுள் தண்டனையாக உயர்த்தும் சட்ட மசோதா உத்தர பிரதேச சட்டப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2-ஆம் தேதி இந்த மசோதாவின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தி, நிறைவேற்றப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.