நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே ஒற்றை காட்டு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொரப்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உலா வந்த ஒற்றை ஆண் காட்டு யானை, மச்சிக்கொல்லியில் உள்ள குடியிருப்பு பகுதியில் நுழைந்து. வீட்டு வாசல் வழியாக நடந்து சென்ற காட்டு யானையை பொதுமக்கள் விரட்டியுள்ளனர்.
அப்போது சாலையோரம் இருந்த பாக்கு மரத்தை உடைத்து சாப்பிடும்போது மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்தது. இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானையின் உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.