நீலகிரி மாவட்டம், கூடலூரில் பெய்துவரும் கனமழை காரணமாக வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
கூடலூர் பகுதியில் பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே மரங்கள் விழுந்தும், மண் சரிவு ஏற்பட்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கூடலூரில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தொரப்பள்ளி அருகே இருவயல் கிராமத்தில் வெள்ளம் சூழந்தது.
10க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்ததால் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் மக்கள் தவித்தனர், மழை தொடர்வதால் மீட்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.