நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு JPK5 கோடி ரூபாய் நிதியுதவி தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, வயநாடு நிலச்சரிவு தொடர்பாக தனது வருத்தத்தை தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் கேரள அரசுக்குத் துணையாக பணியாற்றிட தமிழ்நாட்டிலிருந்து இரண்டு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான சமீரன் மற்றும் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் தலைமையிலான மீட்புக்குழு உடனடியாக அனுப்பப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த மீட்புக்குழு இன்றே கேரளா புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.