40வது முறையாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழகத்தின் 2வது பெரிய அணையான பவானி சாகர் அணையில் இருந்த திறக்கப்படும் நீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில், கோவை, நீலகிரியில் உள்ள பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த 2 மாதங்களில் 45 அடியில் இருந்த பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியுள்ளது. அணை கட்டப்பட்ட காலம் முதல் தற்போது 40-வது முறையாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியுள்ளதால், மூன்று மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.