கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு தொடர்பாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டறிந்தார்.
அப்போது நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு உதவுவதாக அமித் ஷா உறுதியளித்தார். இதனிடையே, மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக விமானப் படை தரப்பில் அனுப்பிவைக்கப்பட்ட இரண்டு அதிநவீன ஹெலிகாப்டர்கள் வயநாட்டை வந்தடைந்தன.