தொழில் முனைவோர்களிடம் கட்டாய வசூல்! - அண்ணாமலை குற்றச்சாட்டு!
Sep 17, 2025, 12:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொழில் முனைவோர்களிடம் கட்டாய வசூல்! – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jul 30, 2024, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உதயநிதியின் தனது தனிப்பட்ட ஆசைகளுக்கு நிதி வழங்க, தமிழக மக்களைக் கட்டாயப்படுத்த முடியாது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

ஊழலுக்கான புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்து, தனது இந்தி கூட்டணிக் கட்சிகளுக்குப் புதிய ஊழல் பாதையை அமைத்துக் கொடுப்பதில், திமுக தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது.

கடந்த காலங்களில், மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கான மாணவர்களின் தகுதிப் பட்டியலைக் கொடுத்து, கட்சிக்கு நன்கொடை வாங்கும் வழியை அறிமுகப்படுத்திய திமுக, இப்போது நன்கொடை வசூலிப்பதில் புதிய உயரத்துக்குச் சென்றுவிட்டனர்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் (TNPCB), F4 மோட்டார் பந்தய நிகழ்ச்சிக்காக, சென்னை மற்றும் மேற்கு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான தொழில்முனைவோர்களிடம் நிதி வசூலிக்க வேண்டும் என்ற பணி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நிதி வழங்கவில்லை என்றால், சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று, தொழில்முனைவோர்களைக் கட்டாயப்படுத்தி வருகின்றனர். இந்த F4 பந்தய நிகழ்ச்சி, கோபாலபுர இளவரசர்  உதயநிதி ஸ்டாலினின் கனவுத் திட்டமாகும், கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த இந்நிகழ்ச்சி, பின்னர் ஒத்திவைக்கப்பட்டு அடுத்த மாதம் சென்னையில் நடைபெறவிருக்கிறது.

இதற்காக, தமிழக அரசு ஏற்கனவே ₹40 கோடி செலவிட்டுள்ளது. இப்போது, தமிழ்நாட்டிலுள்ள சிறு தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர் மற்றும் தொழிலதிபர்கள் அனைவரும், உதயநிதி ஸ்டாலினின் மோட்டார் பந்தய நிகழ்ச்சிக் கனவுகளை நனவாக்க, நிதி வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், ஒவ்வொரு நிறுவனங்களிடம் இருந்தும், ₹25,000 முதல் ₹1,00,00,000 வரை வசூல் செய்யப் பணிக்கப்பட்டுள்ளனர். இந்த நிதி, “ரேசிங் ப்ரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்” (Racing Promotions Private Ltd) என்ற நிறுவனத்தின் பெயரில் வழங்கப்பட்டுள்ளன.

அவர்கள் கேட்கும் நிதி வழங்கப்படவில்லை என்றால், நிறுவனத்தின் மீது, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் நடவடிக்கைகளை நிச்சயம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற நிலை நிலவுகிறது.

இந்த “ரேசிங் ப்ரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்” நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக, கோபாலபுர இளவரசரின் நெருங்கிய நண்பரான அகிலேஷ் ரெட்டி என்பவர் இருப்பது தற்செயலானது அல்ல.

இந்த நிறுவனத்தின் வருமானம் மற்றும் நிதி அறிக்கைகளை, பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன். பொதுமக்கள் கடினமாக உழைத்துச் சேர்க்கும் பணத்தை, திமுக அரசு எப்படிக் கொள்ளையடிக்கிறது என்பதைத் தமிழக மக்களும் தெரிந்து கொள்ளட்டும்.

தனது தனிப்பட்ட ஆசைகளுக்கு நிதி வழங்க, தமிழக மக்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்பதை உதயநிதியின் ஸ்டாலினுக்கு நினைவூட்ட விரும்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalaiDMK reaches new heights in collecting donations for F4 motor racing event! - Annamalai allegation
ShareTweetSendShare
Previous Post

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழப்பு!

Next Post

SNACKS வர்த்தகத்தில் திருப்பம்! – அமெரிக்க நிறுவனத்திற்கு கைமாறும் ஹல்திராம்!

Related News

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

பாக். அதிபர் சர்தாரியின் சீன சுற்றுப்பயணம் – எதிர்கால இந்தியா – சீனா உறவை மாற்றியமைக்குமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

காதல் வலை விரித்து கோடிகளில் மோசடி – மீண்டும் கைதாகியுள்ள நிஜ உலக ‘TINDER SWINDLER’!

Load More

அண்மைச் செய்திகள்

மழைநீர் வடிகால்களில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு – அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்!

உரிய விலை கிடைக்காமல் உதிர்ந்து விழும் பூக்கள் – விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்குமா தமிழக அரசு?

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

திராவிட மாடல் கும்பல் அரியணையில் தொடரவே தகுதியற்றது – நயினார் நாகேந்திரன்

செங்கல்பட்டு அருகே பாமக பிரமுகர் அடித்துக் கொலை!

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – 2வது சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி!

பிசிசிஐ ஸ்பான்சரான அப்போலோ டயர்ஸ் நிறுவனம்!

தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

4 நாட்களில் ரூ.91.45 கோடியை வசூலித்த மிராய் படம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies