டெல்லியில் ஐஏஎஸ் தேர்வு மையத்தில் மழைவெள்ளம் புகுந்து 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில், விசாரணை அறிக்கையை கல்வித் துறை அமைச்சர் அதிஷியிடம் தலைமைச் செயலர் தாக்கல் செய்தார்.
அதில், சம்பந்தப்பட்ட பயிற்சி மையம் கழிவுநீர் வெளியேறும் அமைப்பை முழுமையாக மூடியதாகவும், அதன் தரைதளம் நேரடியாக சாலையுடன் இணைக்கப்பட்டிருந்ததால், கனமழை பெய்யும்போது இயல்பாகவே தண்ணீர் உள்ளே வழிந்தோடியதாகவும் தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார்.
மேலும், பணியில் அலட்சியமாக செயல்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் அந்த அறிக்கையில் டெல்லி தலைமைச் செயலர் விவரித்துள்ளார்.