தமிழ்நாட்டில் நடைபெறும் கொலை சம்பவங்களுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
சிவகங்கை அடுத்த வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்த பா.ஜ.க கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளர் செல்வக்குமார் என்பவர் கடந்த 26 ஆம் தேதி 5 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று அவரது குடும்பத்தினரை சந்தித்து பா.ஜ.கவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது என்பது நிதர்சனம் அதிலும் குறிப்பாக கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் 131 கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது.
அதில் கடந்த 15 நாட்களில் மட்டும் அரசியல் பிரமுகர்கள் 8 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதில் சிவகங்கையில் பா.ஜ.க நிர்வாகி செல்வக்குமாரும் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் அவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளவரை சுட்டு பிடித்துள்ளனர். அவர்களின் பின்புலம் ஆய்வு செய்தால் கஞ்சா போதையே என்றும் போதைபொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவரும் கள்ளச்சாராய மரண வழக்கில் கைது செய்யப்பட்டவரும் திமுகவை சேர்ந்த நபராகவே இருக்கிறார்.
எனவே சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் முதல்வர் ஸ்டாலின் பதவி விலகவண்டும் என்றும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஊத்தி மூடப்பட்டுள்ளது என்றும் அதில் சம்பந்தப்பட்ட ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டார் என்பதே வழக்கை ஊடிமூத்த நடக்கும் வேலை என்றும் எனவே தான் அந்த வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவித்ததுடன் குற்றவாளி கொலை செய்யப்பட்டது என்பது எண்கவுண்டரே இல்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதது குறித்த கேள்விக்கு தமிழக பட்ஜெட்டில் ஒவ்வொரு மாவட்டத்தின் பெயரையும் தனி, தனியாக குறிப்பிட்டா பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது? எனவும் தமிழகத்திற்கான பட்ஜெட் என்றால் எல்லா மாவட்டத்திற்குமான பட்ஜெட் என தானே எடுத்துக்கொள்கிறோம் அதிலும் குறிப்பாக தமிழகத்திற்கு என ஏராளமான நலத்திட்டஙகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்னகிரி 8 வழிச்சாலைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் பட்ஜெட்டில் தமிழகம் என்கிற பெயர் மட்டுமல்ல பா.ஜ.க ஆளும் குஜராத், உ.பி மாநிலங்களின் பெயர்கூடத்தான் இல்லை அதற்காக அங்கெல்லாம் நிதி ஒதுக்கவில்லை என்று அர்த்தமில்லை எனத் தெரிவித்தார்.